Sunday, July 14, 2013

குறைந்த பேச்சு ஆபத்து ! அதிகம் பேச்சு பேராபத்து !!

டெமாட்தனிச் பற்றி அறியாதவர் ஒரு சிலரே. சிறந்த மேடை பேச்சாளரான  இவர் சிறு வயதில் திக்கு வாயனாக இருந்தார்.தனது சகவயது தோழர்கள் கேலி செய்வதை தாங்க முடியாத இவர். தனது முடியை மழித்துக் கொண்டு வீட்டிலேயே இருந்தார்.




ஆனால் பின்பு தன்னம்பிக்கைப் பெற்று, யாருமில்லாத சமயத்தில் கடற்கரைக்குச் சென்று கூழாங்கர்களை வாயினிற் போட்டு பேசப் பழகினார். இன்று உலகமறிந்த பேச்சாளராக திகழ் தார் .

நன்றி: நீ ஒரு சாதனையாளன். 

Saturday, July 13, 2013

(ஒன்றே சொல் நன்றே செய்) கூர்மை

 செய்யும் போது ஒரே சிந்தனையுடன் செயலை செய்ய வேண்டும். ஆணியும்  கூர்மையாக இருந்தால்தான் ஆணிக்கே மதிப்பு. அதுபோல நாம் செய்யும் வேலையும் கூர்மையாக இருக்க வேண்டும்.

ஒரு இளைஞன் மிகுந்த நட்டத்தில் இருந்தான். அவனுக்கு விறகு வெட்டும் வேலைதான் கிடைத்தது.  அந்த விறகு வெட்டும் வேலையில் ஒரு நாளைக்கு 5 மரங்கள் வெட்ட வேண்டும், அதுதான்  ஒப்பந்தம்.




மறுநாள் மிகுந்த உற்சாகத்துடன் தனது வேலையை தொடங்கினான், என்ன ஆச்சரியம் 10 மரங்கள்  வெட்டிட்டினான் , அதாவது ஒப்பந்தந்தை விட கூடுதலாக 5 மரங்கள், முலாளியிடம் பராட்டும் பெற்றான்.
 அதற்கு அடுத்த நாள் 8 மரங்களும், அடுத்த நாள் 6 மரங்களும் வெட்டினான் . முதலாளியும் மகிழ்ந்தார்.

நான்காவது நாள் அந்த இளைஞனால் 3 மரம் மட்டுமே வெட்ட முடிந்தது. தன்னால் 3 மரங்களுக்கு மேல் வெட்ட முடியவில்லை என்று சோர்வாக முதலாளியிடம் பதிலளித்தான் அந்த துடிப்பற்ற இளைஞன்.

முதலாளியும் ஆறுதல் கூறி, ஒரு முதியவரிடம் ஆலோசனை பெறுமாறு கூறினார்.ஏனெனில் அம்முதியவர் நாள் ஒன்றுக்கு சராசரியாக 5 மரங்கள் வெட்டுபவர்.

இந்த இளைஞன் அவரிடம் சென்று ஆலோசனை கேட்டான். அவர் கூறிய வார்த்த அவனை சிந்திக்க வைத்தது,





"ஒவ்வரு மரமும் வெட்டி முடித்த பின் நான் தவறாமல் கோடரியை கூர்மைபடுதுகிறேன் என்றார்."
இக்கதையிலிருந்து நாம் அறிவது கூர்மையுடன் இருக்க வேண்டும். நேரம் தவறாமல் கூர்மைபடுத்த வேண்டும்.

நன்றி: நன் கேட்டே அனுபவங்கள்.