Saturday, November 3, 2012

தேவை VS ஆசை நேருக்கு நேர்.

ஒருவன் வெயிலில் நடந்து செல்லும் போது, மரத்தின் நிழலில் ஒதுங்குவது "தேவை".ஆனால் எனக்கு குளிர்சாதன அறைதான் வேண்டுமென்றால் அது "பேராசை".

இன்றைய இளைஞர்கள் தேவை எது ஆசை எது என்று தெளிவில்லாமல் இருக்கின்றனர். 

நன்றி:வளரும் இளமை .

புத்தருக்கும் ஓர் ஆசை !

புத்தருக்கும் ஓர் ஆசை , ஆசையை அழிக்க வேண்டுமென்று.ஆசையில்லாமல்  எதுவம் நடப்பதில்லை.


ஒரு செயலை செய்யும்போது தெளிவு அவசியமாம் ஆனால் தூக்கத்திற்கு இது பொருந்தாது.


மனிதன் ஆசைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்,அதுவே தேவையாகவும் இருக்க வேண்டும்.
நன்றி:நீ ஒரு சாதனையாளன்.

Friday, November 2, 2012

முதல் பதிப்பு...

தன்னம்பிக்கை என்னும் ஒலியை உணரும் போதே மனதில் தைரியமும் , சுயபலமும் பெறுகிறது .ஆனால் சிலருக்கோ சாதனை என்னும் வார்த்தையைக் கேட்ட பிறகும்   தன்னம்பிக்கை   பிறக்கவில்லை  ,ஏனோ விரக்தி ?



சாதனை மனிதர்களை ஏக்கத்துடன் பார்க்கும் சாதாரண மனிதர்கள் இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். என்னவோ, அவர்கள் ஒன்றை அறியவில்லை இலச்சக்கணக்கான உயிர் அணுக்களை பின்னுக்கு தள்ளி இவ்வுலகில் பிறந்ததே சாதனை தான். அவ்வகையில் பார்த்தல் நாம் அனைவரும் சாதனையாளர்கள் தான்.

சோம்பேறிகளுக்கு பிடித்த வார்த்தை.

உன்னால் முடியாது,எதுவுமில்லை,நீ செய்ய முடியாது என்று சொல்வதையெல்லாம் உலகில் எங்கோ ஒருவன் செய்து கொண்டுதான் இருக்கிறான்.

உழைப்பு உழைக்கதவர்களுக்கும் பிடித்த ஒன்று.ஒருவன் தன கடமைகளை ஒழுங்காக செய்தால் அதுவும் சாதனைதான்.
ஆம் .உழைப்பு சோம்பேறிகளுக்கும் பிடித்த வார்த்தை .ஏனெனில் அது அவர்களுக்கு கிடைப்பதில்லை.

தெரிந்த விடயத்தை தெரிந்துகொள்வது பெரிய விடயமன்று,தெரியாதவர்களை தெரிய முயல்வதும் சுலபமன்று .